​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜய் ரசிகன் என்று மிகவும் பெருமையாக சொல்லிக் கொள்வேன் - விஷால்

Published : Aug 29, 2023 2:54 PM



விஜய் ரசிகன் என்று மிகவும் பெருமையாக சொல்லிக் கொள்வேன் - விஷால்

Aug 29, 2023 2:54 PM

நடிகர் விஷால் தனது 46-வது பிறந்தநாளை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடினார். பின்னர் மும்மத கடவுகள்களுக்கு அவர் வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், நடிகர் விஜயின் ரசிகன் என்பதில் தனக்கு பெருமை என்றும், நடிகர் விஜயின் வில் பவர் தான் தமக்கு வழிகாட்டி என்றும் கூறினார்.

திரையுலகில் சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த விஷால், 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினி, இந்த வயதிலும் ஓய்வெடுக்காமல் மக்களை மகிழ்விக்க நினைக்கிறார் என்றால், அதுதான் சூப்பர் ஸ்டாருக்கான அடையாளம் என்றார்.