​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்த இளைஞர்கள்.. கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் என நம்பிக்கை

Published : Aug 28, 2023 9:07 PM

3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்த இளைஞர்கள்.. கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் என நம்பிக்கை

Aug 28, 2023 9:07 PM

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம இளைஞர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.

கடற்கரையோர கிராமமான சின்னப்பெருந்தோட்டத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் மண்ணால் கரை அமைத்து கொடுக்கப்பட்டது.

இந்த கரையை பலப்படுத்த முடிவெடுத்த கிராம இளைஞர்கள் ஒன்றினைந்து, 5 ஆயிரம் பனை விதைகளை சேகரித்தனர். அந்த விதைகளை சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளமுள்ள கரைகளில் நடவு செய்யும் பணியில் இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். விதைகள் முளைத்து மரமானால், மண்ணரிப்பு தடுக்கப்படுவதோடு, கடல் நீர் உட்புகுவதும் தடுக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.