​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூரியனை ஆராய்வதற்காக வரும் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா எல்-1 - இஸ்ரோ அறிவிப்பு

Published : Aug 28, 2023 6:04 PM

சூரியனை ஆராய்வதற்காக வரும் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா எல்-1 - இஸ்ரோ அறிவிப்பு

Aug 28, 2023 6:04 PM

சந்திரயன் 3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்வதற்காக வரும் 2-ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் சூரியன் உள்ள நிலையில், பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் விண்கலம் நிலை நிறுத்தப்படும்.

இதற்காக 4 மாதங்கள் பயணம் செய்து நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விண்கலம் சென்றடையும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

விண்வெளியில் மையம் கொண்ட இந்தியாவின் முதல் ஆய்வகமாக ஆதித்யா எல்-1 செயல்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

எலக்ட்ரோ மேக்னடிக் உதவியுடன் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்வதே ஆதித்யா விண்கலத்தின் முக்கிய நோக்கமாகும்.

பூமியை நோக்கி வரும் சூரிய புயல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.