​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தோனேஷியாவில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பாய்ந்த அதிவிரைவு ரயில் பாதை ரூ.60,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது

Published : Aug 28, 2023 4:46 PM

இந்தோனேஷியாவில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பாய்ந்த அதிவிரைவு ரயில் பாதை ரூ.60,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது

Aug 28, 2023 4:46 PM

அறுபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தோனேஷியாவில் அமைக்கப்பட்ட அதிவிரைவு ரயில் பாதையில் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன.

ஜாவா தீவின் ஒரு முனையில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவை மறுமுனையில் உள்ள படுங் நகருடன் இணைக்கும் இந்த ரயில் பாதை சீன அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்டது.

மணிக்கு 350 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய ரயில் மூலம், 143 கிலோமீட்டர் பயண தூரத்தை 40 நிமிடங்களுக்குள் கடக்க முடியும் எனவும், தென் கிழக்கு ஆசியாவிலேயே இதுதான் அதிவேக ரயில் பாதை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.