​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
20 நாட்கள் குழந்தைகள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை - சவுதி அரேபியாவின் புதிய உத்தரவு

Published : Aug 26, 2023 9:04 PM

20 நாட்கள் குழந்தைகள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை - சவுதி அரேபியாவின் புதிய உத்தரவு

Aug 26, 2023 9:04 PM

குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

முறையான காரணங்களின்றி 20 நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகள் குறித்து கல்வித்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் தகவல் அளிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையில், பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருந்தது நிருபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.