​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர்ந்து சுத்தமான ஸ்மார்ட் சிட்டிகளில் முதலிடம் வகிக்கும் இந்தூர் நகரம்... சூரத் ஆக்ரா ஆகிய நகரங்களும் அடுத்தடுத்த இடத்தை கைப்பற்றின

Published : Aug 26, 2023 8:09 AM

தொடர்ந்து சுத்தமான ஸ்மார்ட் சிட்டிகளில் முதலிடம் வகிக்கும் இந்தூர் நகரம்... சூரத் ஆக்ரா ஆகிய நகரங்களும் அடுத்தடுத்த இடத்தை கைப்பற்றின

Aug 26, 2023 8:09 AM

இந்தியாவின் ஸ்மார்ட் நகரங்களுக்கான போட்டியில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதல் பரிசைத் தட்டிச்செல்கிறது. தொடர்ந்து சூரத் ஆக்ரா ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

அடிப்படை வசதிகள், சுத்தம் போன்றவற்றுக்காக சிறந்த நகரங்களுக்கு பரிசு அளிக்கப்படுகிறது. செப்டம்பர் 27ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ இந்தூரில் தேசிய ஸ்மார்ட் சிட்டி விருதுகளை வழங்க உள்ளார்.

மொத்தம் 66 நகரங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. யூனியன் பிரதேசப் பிரிவில் சண்டிகர் முதல் பரிசைப் பெறுகிறது.

கோயபுத்தூர் நகரம் ஏரிகள் குளங்கள் தூர்வாரப்பட்டதற்காகவும் சிறந்த சாலைகள் கட்டமைப்பைக் கொண்டதாலும் பரிசு பெறுகிறது. இந்தியாவின் நூறு சிறந்த நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக தேர்வு செய்ய மத்திய அரசு ஆண்டுதோறும் இந்தப் போட்டியை நடத்தி வருகிறது.