​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை விடுத்தது யார்..?

Published : Aug 26, 2023 6:12 AM

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை விடுத்தது யார்..?

Aug 26, 2023 6:12 AM

பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரிக்ஸ் மாநாட்டின் இடையே பேச்சுவார்த்தை நடத்த சீனா கோரிக்கை விடுத்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மோடியும் ஜி ஜின்பிங்கும் சந்தித்தது திட்டமிடப்படாத பேச்சுவார்த்தை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதும், இந்தியா கோரிக்கை விடுத்ததாக சீனா தெரிவித்ததை மறுத்துள்ளது.

சீனா தான் இருதரப்பின் பேச்சுவார்த்தைக்குக் கோரிக்கை விடுத்தது என்றும் சீனாவின் கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அசல் எல்லைக் கோடு பகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் நீடிக்கும் பிரச்சினைகளை மோடி சீன அதிபருக்கு சுட்டிக் காட்டியதாகவும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லையில் அமைதி நீடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் வெளியுறவுச் செய்தியாளர் வினய் குவாட்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டில் மீண்டும் ஜி ஜின்பிங்கை மோடி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.