​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பாரம்பரிய பொருட்களை உலகத் தலைவர்களுக்கு பரிசளித்த பிரதமர்

Published : Aug 25, 2023 2:07 PM

இந்திய பாரம்பரிய பொருட்களை உலகத் தலைவர்களுக்கு பரிசளித்த பிரதமர்

Aug 25, 2023 2:07 PM

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 15-வது பிரிக்ஸ்  உச்சிமாநாட்டில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலைப் படைப்புகள் மற்றும் பாரம்பரிய பொருட்களை, உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார்.

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு தெலுங்கானாவில் இருந்து 500 ஆண்டுகள் பழமையான, ஒரு ஜோடி 'சுராஹி'யையும், அவரது மனைவிக்கு நாகாலாந்து சால்வையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

மேலும் பிரேசில் அதிபர், லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு மத்தியப் பிரதேச பழங்குடியினரால் போற்றப்படும் கலை வடிவங்களில் ஒன்றான, கோண்ட் ஓவியத்தை பரிசாக வழங்கினார்.