​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன்... விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக இளைஞர்களிடம் உறுதி

Published : Aug 25, 2023 8:15 AM

அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன்... விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக இளைஞர்களிடம் உறுதி

Aug 25, 2023 8:15 AM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விளையாட்டு மைதானத்தை பார்வையிட சென்ற  வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கைப்பந்து விளையாடினார். 

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பட்டணம், முனியப்பம்பாளையம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அங்கன்வாடி மையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் மூலக்குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டு மைதான கோரிக்கையை ஏற்று, அதற்கான அரசு நிலத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சர் மதிவேந்தன், இளையோருடன் கைப்பந்து விளையாடினார்.