​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட்டிற்கு எதிரான தி.மு.கவின் உண்ணாவிரதம் நாடகமே.. தி.மு.கவால் நீட்டை ரத்து செய்யவே முடியாது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published : Aug 24, 2023 6:40 PM

நீட்டிற்கு எதிரான தி.மு.கவின் உண்ணாவிரதம் நாடகமே.. தி.மு.கவால் நீட்டை ரத்து செய்யவே முடியாது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Aug 24, 2023 6:40 PM

நீட்டுக்கு எதிரான தி.மு.கவின் உண்ணாவிரதம் ஏமாற்று நாடகம் தான் எனவும், தி.மு.கவால் நீட்டை ரத்து செய்யவே முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரையில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.பி.உதயகுமார், நீட் தேர்வில் மாணவர்களை ஏமாற்றி வந்த தி.மு.கவினர் தற்போது ராகுல்காந்தி பிரதமரானால் நீட்டை ரத்து செய்வார் என கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.

கட்ச தீவை தி.மு.க தான் தாரை வார்த்துக் கொடுத்தது என்பதால் அதனை மீட்பதில் ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் எனவும் உதயகுமார் கூறினார்.