​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை வாபஸ் பெற லஞ்சம் பெற்ற டிஎஸ்பி... 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

Published : Aug 24, 2023 1:24 PM

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை வாபஸ் பெற லஞ்சம் பெற்ற டிஎஸ்பி... 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

Aug 24, 2023 1:24 PM

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை வாபஸ் பெறுவதற்காக லஞ்சம் பெற்ற டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் 2009 - 2011 காலகட்டத்தில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாகப் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ளார்.

பணிக்காலத்தில் கிருபாகரன் சாம் என்பவர் மீது பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்ய 3 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் பெறும்போது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு 2  ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளிதுள்ளது.

அபராதத்தை மட்டும் கட்டிய ஜெயக்குமார், மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.