​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாங்குநேரி அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து... தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு- 3 பேர் காயம்

Published : Aug 24, 2023 10:42 AM

நாங்குநேரி அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து... தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு- 3 பேர் காயம்

Aug 24, 2023 10:42 AM

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழந்தார்.

விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்து பேட்டியெடுப்பதற்காக, நெல்லையிலிருந்து செய்தியாளர் குழு நேற்று மாலை ஒரு காரில் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றது.

பின்னர் அக்குழுவினர் காரில் மீண்டும் நெல்லை நோக்கி புறப்பட்ட போது நள்ளிரவு ஒரு மணி அளவில் நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மில் அருகே அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

அதில் காரை ஓட்டி வந்த தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் சங்கர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

நெல்லை செய்தியாளர், 2 கேமராமேன்கள் காயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.