​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலாச்சோறு ஊட்டுவதாக கிண்டலடித்த வாய்களுக்கு பூட்டு.. நிலாவில் தடம் பதித்த இந்தியா..!

Published : Aug 24, 2023 7:04 AM



நிலாச்சோறு ஊட்டுவதாக கிண்டலடித்த வாய்களுக்கு பூட்டு.. நிலாவில் தடம் பதித்த இந்தியா..!

Aug 24, 2023 7:04 AM

நிலவில் கால் வைக்கும் நாடுகளுக்கு மத்தியில் நிலாச்சோறு மட்டுமே ஊட்டி வருவதாகக்கூறிய வாய்களுக்கு பூட்டுபோடும் விதமாக நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்தியா. நிலவில் கொடி நாட்டிய பெருமை மிகு சம்பவத்தில் தமிழர்களின் பங்கு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

நிலாச்சோறு மட்டுமே ஊட்டிக் கொண்டிருப்பதாக ...அன்று கேலி பேசியவர்களின் வாயை அடைக்கும் வகையில், எங்களாலும் முடியும் என்று இந்தியாவும் நிலவில் தடம் பதித்து மக்களை கொண்டாட வைத்துள்ளது இஸ்ரோவின் விக்ரம் லேண்டர்..!

1959ஆம் ஆண்டு முதன் முதலாக சோவியத் ரஷ்யா நிலவில் தடம் பதித்தது. அதனை தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பி கால் பதித்தது. 2007 ஆம் ஆண்டு சீனாவின் விண்கலம் நிலவில் தடம் பதித்தது. இந்த 3 நாடுகளும் தொட இயலாத நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 மூலம் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது

இதற்கு முன்பு தென் துருவத்தில் தடம் பதிக்க முயன்று இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா சாப்ட் லேண்டிங் முறையில் விக்ரம் லேண்டரை நிலவில் இறக்கி வெற்றிக்கொடி நாட்டிய நிலையில் அதனுள் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவை ஆய்வு செய்வதற்கான படங்களை எடுத்தனுப்ப தொடங்கி விட்டது.

இந்த வெற்றியை இந்தியர் ஒவ்வொருவரும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வாணவேடிக்கைகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

நிலவுக்கு விண்கலம் அனுப்பும் பணி இந்திய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றாலும் அதில் தமிழக விஞ்ஞானிகளின் பங்கு அளப்பரியது. சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ சாய் ராம் BE பட்டமும், திருச்சி REC-ல் முதுகலை பொறியியல் பட்டமும் பெற்றுள்ளார். சென்னை ஐஐடியில் பிஎச்டி பட்டம் பெற்றவர். பல இஸ்ரோ மையங்களுடன் இணைந்து சந்திரயான் -3 ஐ ஒன்றிணைக்கும் ஒட்டுமொத்த பணிக்கு பொறுப்பாக உள்ளார்.

இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கின் 7ஆவது இயக்குனரான பி.என்.ராமகிருஷ்ணா செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி விண்கலங்களின் சுற்றுப்பாதை நிர்ணயம் செய்ததில் நிபுணராகக் கருதப்படுகிறார்.

விண்வெளிப் பணிகளுக்காக விண்கலங்களை உருவாக்கும் இஸ்ரோ செயற்கைக்கோள் மையமான யூ.ஆர்.ராவ் ஸ்பேஸ் சென்டரின் இயக்குநரான சங்கரன் ஜூன் 2021 முதல் இந்த பொறுப்பில் உள்ளார். இஸ்ரோவின் சந்திரயான் 1 மற்றும் 2 க்கான மின் அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ஜூலை 14 அன்று எல்எம்வி 3 ராக்கெட்டில் சந்திரயான் -3 ஏவப்படுவதற்கான இஸ்ரோவின் பணி இயக்குனரான மோகன குமார், ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணையின் வெற்றி குறித்த அறிவிப்பை வெளியிட்டவர். திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக உள்ளார். இது ராக்கெட் திறன்களை உருவாக்கும் மையமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்.

கிரையோஜெனிக் என்ஜின் வடிவமைப்பு மற்றும் திட்டங்களின் மேலாண்மை ஆகியவற்றில் நிபுணரான நாராயணன், சந்திரயான்-3 விண்கல உந்துவிசை அமைப்புகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

மனித விண்வெளி விமான அமைப்புகளின் நிபுணரான உன்னிகிருஷ்ணன் நாயர், திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் முக்கிய ராக்கெட் கட்டும் மையத்தின் இயக்குநராக உள்ளார்.

1985-ல் இஸ்ரோவில் சேர்ந்த இவர், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் எல்விஎம்3 ராக்கெட்டுகளுக்கான பல்வேறு விண்வெளி அமைப்புகள் மற்றும் வழிமுறைகளை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார்.

இவர்களை போல இன்னும் பல தமிழர்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த ஓய்வறியா உழைப்பை கொட்டிய விஞ்ஞானிகளால் இந்திய விண்கலம் நிலவில் தடம்பதித்திருப்பதாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.