​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் 26 தளங்கள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது ... 300 வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்

Published : Aug 23, 2023 2:52 PM

சீனாவில் 26 தளங்கள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது ... 300 வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்

Aug 23, 2023 2:52 PM

சீனாவின் நன்கை மாகாணம் டியான்ஜின் நகரில் 26 தளங்கள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 23 நிலையங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்களில், சுமார் 300 வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் ஒரு பகுதி கொழுந்துவிட்டு எரியும் நிலையில், கட்டிடத்தில் யாரும் சிக்கவில்லை என்றும், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.