​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடியில் உயர்சிறப்பு மருத்துவமனை.. காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. !!

Published : Aug 22, 2023 8:55 PM

வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடியில் உயர்சிறப்பு மருத்துவமனை.. காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. !!

Aug 22, 2023 8:55 PM

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், தேனி மற்றும் திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகளையும் அவர் திறந்து வைத்தார்.

 

முன்னதாக, 384ஆவது சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகையில் பள்ளி மாணவர்களின் "அக்கம் பக்கம்" புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்தார். தி இந்து குழுமத்தின் ஆவண புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்து அவர் பார்வையிட்டார்.