நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் -3 நிச்சயம் வெற்றிகரமாக தரையிறங்கும் என்று விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானியற்பியல் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அன்னபூரணி சுப்பிரமணியம், விரிவான சோதனைகள் செய்யப்பட்டிருப்பதால் லேண்டர் நிலவில் மென்மையாக தரையிறங்கும் என்று கூறியுள்ளார்.
சந்திரயான் -2 தோல்வியில் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து சந்திரயான்-3 உருவாக்கப்பட்டுள்ளதால் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் பிரச்சினை இருக்காது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆர்.சி. கபூர் தெரிவித்துள்ளார்.