செங்கோட்டையிலிருந்து சென்னை தாம்பரம் வரை வந்த அதிவிரைவு ரயிலின் ஒரு பெட்டியில் ஏசி வேலை செய்யாததால் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
எம் 5 பெட்டியில் 84 பேர் பயணம் செய்த நிலையில், ஏசி வேலை செய்யாததால் அவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மாற்று பெட்டியில் பயணிக்க ஏற்பாடு செய்துதரக் கோரி பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். திருவாரூரில் ஏசியை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு, ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.