சீன மின்சார கார் நிறுவனம் வெறும் 10 நிமிட சார்ஜிங்கில் 400 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்கும் பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுருக்கமாக CATL என அழைக்கப்படும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது பேட்டரி உலகின் முதல் 4C சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங் LFP பேட்டரி ஆகும்.
இதன் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 700 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. Shenxing என பெயரிடப்பட்ட புதிய பேட்டரியில் 10 நிமிடங்களில் பூஜியம் முதல் 80 விழுக்காடு சார்ஜ் செய்யமுடியும்.
இதே அளவில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் சார்ஜ் செய்யலாம் என சிஏடிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் Shenxing பொருத்தப்பட்ட மின்சார வாகனங்கள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் சந்தையில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.