​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக நியாயம் பேசுவாரே.. அதே பிரகாஷ்ராஜ் தான் இப்படியெல்லாம் செய்தாராம்..! பாபி சிம்ஹா உனக்கு மச்சம்யா..!

Published : Aug 22, 2023 6:23 AM



உலக நியாயம் பேசுவாரே.. அதே பிரகாஷ்ராஜ் தான் இப்படியெல்லாம் செய்தாராம்..! பாபி சிம்ஹா உனக்கு மச்சம்யா..!

Aug 22, 2023 6:23 AM

கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ்ராஜ், கிராம சாலையை ஆக்கிரமித்து தனது ரிசார்ட்டுக்கு செல்வதற் தனியாக சாலை அமைத்து கொண்டுள்ளதாகவும், விதிகளை மீறி 3 மாடி பங்களா கட்டுவதற்கு நடிகர் பாபிசிம்ஹாவிற்கு அனுமதி வழங்கியது எப்படி எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 குளுகுளு பிரதேசமான கொடைக்கானலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிமென்ட் சாலை வனத்துறையின் இடத்தை ஆக்கிரமித்து பிரபல நடிகரான பிரகாஷ்ராஜே பிரத்யேகமாக அமைத்துக் கொண்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இந்தியா நிலவிற்கு அனுப்பிய சந்திரயான் விண்கலத்தை கிண்டல் செய்து டிவிட்டரில் பதிவிட்டு நெட்டிசன்களின் கண்டனத்திற்கு உள்ளான நடிகர் பிரகாஷ்ராஜ், கொடைக்கானல் மலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பேத்துப்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி சிமென்ட் சாலை அமைக்க முடியும்? இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. விவசாய பணிக்கு ஜேசிபி வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்காத மாவட்ட நிர்வாகம் பிரகாஷ்ராஜின் நிலத்தில் 25 நாட்களாக இரண்டு கனரக வாகனங்கள் இயங்குவதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள் ? எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

அரசு இடத்தில் அமைக்கப்பட்ட பாதையை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என பிரகாஷ்ராஜ் போர்டு வைத்ததாகவும், மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த போர்டு அகற்றப்பட்டதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

சாதாரணமாக ஒரு கம்பை நட்டி குடிசை அமைத்தாலே நடவடிக்கை எடுத்து விடும் வனத்துறையினர் அரசு தரிசு நிலத்தில் நடிகர் பாபிசிம்ஹா 3 மாடி பங்களா கட்டி வருவதை ஏன் கண்டுகொள்ளவில்லையென கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள்.

இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை தனிப்பட்டவர்களின் நலனுக்காக பாழ்படுத்தாமல், பாதுகாக்க வேண்டிய கடமையை அரசு அதிகாரிகள் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதியினரின் விருப்பம்.