திருப்பத்தூரில் உள்ள செருப்புக்கடையில் விற்பனை பணத்தை எடுத்ததாக உரிமையாளர் திருட்டுப்பட்டம் கட்டியதால், ஊழியர் கடைக்கு தீ வைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்சியர் அலுவலகம் அருகில் முகமதுஅமீன் என்பவர் நடத்தி வரும் கடையில் முகமது அப்பாஸ் என்ற இளைஞர் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விற்பனை ஆன தொகையில் இருந்து 200 ரூபாய் குறைவதாக முகமது அப்பாஸிடம் கேட்ட முகமது அமீன், இதுபற்றி மற்றவர்களிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முகமது அப்பாஸ், ஞாயிற்று கிழமை இரவு முகமது அமீன் கடையை மூடிவிட்டு சென்ற சிறிது நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த மற்றொரு சாவியை வைத்து கடையை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு கடையை பூட்டி விட்டு அங்கிருந்து சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.
கடையில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானதாக கூறப்படும் நிலையில் போலீசார் கடைக்கு தீ வைத்த வாலிபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது அமீன், கடையை மூடிவிட்டு சென்றதும், முகமது அப்பாஸ் மற்றொரு சாவியால் கடையை திறந்து தீ வைத்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.