மத்தியப் பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற பாஜக செயற்குழுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
சிவராஜ் சௌகான் தலைமையிலான பாஜக அரசின் சாதனைப் பட்டியலை அவர் அப்போது வெளியிட்டார். 2003 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற பாஜக ஆட்சியின் போது, மாநிலம் வளர்ச்சிப்பாதையில் திரும்பியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இம்மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி இதுபோல ஒரு சாதனைப் பட்டியலை தர முடியுமா என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார். இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
சிவராஜ் சிங் செளகான் மீண்டும், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.