பனாமா கால்வாய் பகுதியில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பனாமா கால்வாயில் சிக்கியுள்ளன.
பனாமா கால்வாய் பசுபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது 48 மைல் நீளமுள்ள நீர்வழித்தடம் ஆகும்.
மேலும் இக்கால்வாய் சர்வதேச கடல்வழி வர்த்தகத்திற்கான முக்கிய வழியாக உள்ளது. இங்கு கடும் வறட்சி நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கி தவிக்கின்றன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.