​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் - கிழக்கு கடற்கரை ரயில்வே முடிவு

Published : Aug 20, 2023 2:12 PM

ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் - கிழக்கு கடற்கரை ரயில்வே முடிவு

Aug 20, 2023 2:12 PM

ஒடிசாவில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் ஐடிஎஸ் எனப்படும் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த கிழக்கு கடற்கரை ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரி, இதன்படி தண்டவாளம் அருகே யானைகள் வரும் போது கட்டுப்பாட்டு அலுவலகங்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் கேட்மேன்களுக்கு இந்த தொழில்நுட்பம் எச்சரிக்கை அனுப்பும் என்றார்.

இதை அடுத்து சம்பந்தப்பட்ட ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்படும் என்று கூறிய அவர், இது மட்டுமின்றி தண்டவாளத்தில் விரிசல், தண்டவாளங்களுக்கு அருகே நிலச்சரிவுகள் போன்ற பேரிடர் குறித்த தகவல்களையும் இந்த தொழில்நுட்பம் அனுப்பும் என்றார்.