​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து... இடிபாடுகளில் சிக்கி 9 வீரர்கள் உயிரிழப்பு

Published : Aug 20, 2023 6:21 AM

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து... இடிபாடுகளில் சிக்கி 9 வீரர்கள் உயிரிழப்பு

Aug 20, 2023 6:21 AM

லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்களைஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 வீரர்கள் உயிரிழந்தனர் .

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

காரு கேரிசன் என்ற இடத்தில் இருந்து லே அருகே கியாரி என்ற இடத்திற்கு பாதுகாப்புப் படையினருடன் ஐந்து ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

அதில் ஒரு வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் 10 வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவல் அறிந்து வந்த ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.


இந்த விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தது குறித்து அதிர்ச்சி தெரிவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ,பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.