​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வு தி.மு.க.வினரின் தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமே எதிரானது : அண்ணாமலை

Published : Aug 19, 2023 8:55 PM

நீட் தேர்வு தி.மு.க.வினரின் தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமே எதிரானது : அண்ணாமலை

Aug 19, 2023 8:55 PM

நீட் நுழைவுத் தேர்வு தி.மு.க.வைச் சேர்ந்தர்களுக்கு சொந்தமான தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமே எதிரானது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு இடையே பேசிய அண்ணாமலை, தி.மு.க. இனி சொல்லும் பொய்கள் அனைத்தும் 24 மணி நேரத்தில் பா.ஜ.க.வால் மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டப்படும் என்றார்.

முன்னதாக, நெல்லை மாவட்ட நீதிமன்றம் அருகே தனது 20-வது நாள் யாத்திரையை அண்ணாமலை தொடங்கினார். கட்சிக் கொடிகளை ஏந்தியபடி பா.ஜ.க. தொண்டர்கள் நடைபயணத்தில் பங்கேற்றனர்.

நடைபயணத்தின் இடையே பாளையங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் சிலைக்கு மாலை அணிவித்து அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.