​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலுக்கடியில் மீன்பிடி கொக்கியில் சிக்கியிருந்த அரியவகை சுறாவை மீட்ட ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள்

Published : Aug 17, 2023 11:39 AM

கடலுக்கடியில் மீன்பிடி கொக்கியில் சிக்கியிருந்த அரியவகை சுறாவை மீட்ட ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள்

Aug 17, 2023 11:39 AM

அமெரிக்காவில் கடலுக்கடியில் மீன்பிடி கொக்கியில் சிக்கியிருந்த அரியவகை சுறாவை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் மீட்டனர்.

புளோரிடாவின் ஃபோர்ட் வால்டன் கடற்பகுதியில் செயற்கையான பாறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதில் சிக்கியிருந்த மீன்பிடி கொக்கி, ஒரு நர்ஸ் இன சுறாவின் வாயில் சிக்கிக் கொண்டதால், அந்த சுறா அங்கிருந்து நகர முடியாமல் பரிதவித்தது. இதனைக் கண்ட ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள், கொக்கியின் கம்பியை வெட்டி எடுத்து சுறாவை விடுவித்தனர்.

மீன்பிடி உபகரணங்கள் கடலில் இருந்து முறையாக அகற்றப்படாததால் கடல்வாழ் உயிரினங்கள் இது போன்ற ஆபத்துகளை எதிர்கொள்வதாக நீச்சல் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர் .