​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா யதார்த்தமான தீர்வு அளிக்கிறது.. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் பாராட்டு

Published : Aug 17, 2023 7:07 AM

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா யதார்த்தமான தீர்வு அளிக்கிறது.. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் பாராட்டு

Aug 17, 2023 7:07 AM

உக்ரைன் விவகாரத்தில் மிகவும் யதார்த்தமான தீர்வை இந்தியா தெரிவித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  உக்ரைன் போரை நிறுத்த உடனடியாக உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றும், பகையுணர்வு களையப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதை சுட்டிக் காட்டினார்.

இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, எகிப்து போன்ற நாடுகள் நேர்மையான முறையில் யதார்த்தமான தீர்வுகளுக்கு யோசனைகள் தெரிவித்திருப்பதாக செர்கய் தெரிவித்தார்.