​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம், திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவு அடைந்துள்ளது

Published : Aug 15, 2023 7:25 PM

சேலம், திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவு அடைந்துள்ளது

Aug 15, 2023 7:25 PM

சேலம் மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வறிக்கை இம்மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. மேலும் மூன்று வழித்தடங்களில் 110 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2வது கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம், திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.