​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்யாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து... 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு

Published : Aug 15, 2023 11:46 AM

ரஷ்யாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து... 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு

Aug 15, 2023 11:46 AM

ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.

திங்கட்கிழமை இரவு மகாச்கலா பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலிருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் பரவியது.

இதில் எரிபொருள் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு, 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு தீ பரவியது.

இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்ததோடு, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

200க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.