​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நார்வே நாட்டு ரோந்துவிமானம் கடல்வழியாக ரஷ்ய எல்லையில் ஊடுருவ முயற்சி...

Published : Aug 15, 2023 8:23 AM

நார்வே நாட்டு ரோந்துவிமானம் கடல்வழியாக ரஷ்ய எல்லையில் ஊடுருவ முயற்சி...

Aug 15, 2023 8:23 AM

நார்வே நாட்டு ராணுவ ரோந்து விமானம் ஒன்று பாரன்ட்ஸ் கடல் மீது பறந்து ரஷ்ய எல்லையில் நுழைய முயன்றதாகவும் அதனை ரஷ்ய விமானப்படையின் மிக் 29 போர் விமானம் விரட்டியடித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யாவின் போர் விமானம் எதிர்கொண்டதையடுத்து நார்வே விமானம் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வேயின் விமானம் போசெய்டன் ரோந்து விமானம் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

நேட்டோ உறுப்பு நாட்டுக்கும் ரஷ்யாவுக்குமான ராணுவ ரீதியான மோதல் ஏற்பட்டால் அது மிகப்பெரிய யுத்தத்திற்கான தொடக்கமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.