கேரளாவில், காவல் நிலையத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்டதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய போலீசாரிடம் உயரதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
இலவன்திட்டா காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் காவலர்கள், கடைக்கு சென்று சிக்கன் வாங்கியது முதல் காவல் நிலையத்தில் சமைத்து சாப்பிட்டது வரை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
அந்த காணொலி வைரல் ஆன நிலையில், பணி நேரத்தில் பொழுதுபோக்கியது தொடர்பாக உயரதிகாரிகள் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.