விவசாயிகளுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
ராஜஸ்தானின் சிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்காக 1 லட்சத்து 25 ஆயிரம் கிசான் சம்ரித்தி கேந்திரா மையங்களை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார். பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் 17 ஆயிரம் கோடி ரூபாயை 8 கோடியே 50 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தும் நிதியுதவி திட்டத்தின் 14-வது தவணை விநியோகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பின்னர் வேளாண் மக்களின் வலியையும் வேதனையையும் புரிந்து கொள்ளும் ஆட்சி தற்போது நாட்டில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். விவசாயிகளின் வலி மற்றும் துயரத்தை புரிந்துகொண்டு, விவசாயிகளின் நலனுக்காகவே கடந்த 9 ஆண்டுகளாக முடிவுகள் எடுக்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.