பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 14வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
ராஜஸ்தானின் சீகர் (Sikar) நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாடு முழுவதும் 8 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவியாக 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குகிறார்.
இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகை 2 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவி விவசாயிகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களிக்கும் என்றும் பிரதமர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.