ரயில்வே துறை தனியார் மயமாகாது என ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் மற்றும் சரக்கு கையாளுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் ரயில்வே வழங்கும் சேவைகளின் தரத்தை பராமரிப்பதற்கும். மேம்படுத்துவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் நாட்டின் உயிர்நாடியான ரயில்வேத் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.
எனவே இது தொடர்பான வதந்திகளை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக் கொண்டார்.