​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போருக்கு நடுவே உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Published : Jul 10, 2023 12:58 PM

போருக்கு நடுவே உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Jul 10, 2023 12:58 PM

போருக்கு நடுவே உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

லித்துவேனியாவில் நடைபெற உள்ள நேட்டோ மாநாட்டில் உக்ரைனை இணைப்பது குறித்து நல்ல முடிவு எட்டப்படும் என அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

நேட்டோ கூட்டமைப்பின் கோட்பாடின் படி தற்போது உக்ரைனை இணைத்தால் அதனை பாதுகாக்க அமெரிக்கா உள்பட அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யா உடன் சண்டையிட வேண்டியிருக்கும் என அதிபர் ஜோ பைடன் விளக்கமளித்துள்ளார்.

உக்ரைனை உடனடியாக நேட்டோவில் இணைக்க முடியாது என்றபோதும் தொடர்ந்து ஆயுத உதவி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.