​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விமான நிலைய விரிவாக்கம் - விரைந்து செயல்படுத்துக.. ஜார்க்கண்ட் ஆளுநரிடம் எஸ்.பி வேலுமணி கோரிக்கை..!

Published : Jul 10, 2023 6:22 AM

விமான நிலைய விரிவாக்கம் - விரைந்து செயல்படுத்துக.. ஜார்க்கண்ட் ஆளுநரிடம் எஸ்.பி வேலுமணி கோரிக்கை..!

Jul 10, 2023 6:22 AM

கோவை விமான நிலையம் விரிவாக்கம் நில எடுப்பு நடந்து வரும் நிலையில், அதனை வேகமாக முடித்து தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர்,கோவையில் ஜப்பான் நாட்டுடன் கூட்டாக கட்டும் மருத்துவமனைக்கு நிதியை பெற்று தரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விழாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனாவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வானதி சீனிவாசன், தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மதிக்கும் பிரதமராக மோடி இருப்பதாக தெரிவித்தார்.

ஒரு எம் பி கூட கொடுக்காத தமிழகத்திற்கு தான் நான்கு ஆளுநர்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளதாகவும், வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.