ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மாநிலத்திற்கும், அரசுக்கும் எதிராக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்வதாகவும், ஊழல் புரிந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளையும் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர் ஆர்.என். ரவியின் பல்வேறு நடவடிக்கைகள், அவர் அப்பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதைப் புலப்படுத்துவதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுளார். செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநர் தமக்கு எழுதிய கடிதங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்பதால் அதனை புறக்கணித்தததாகவும் அவர் தெரிவித்துள்ளார்