இமாச்சல பிரதேசத்தில் பெய்யும் தொடர் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மாண்டி மற்றும் குலு பகுதிகளில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் பியாஸ் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
குலு பகுதியில் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சண்டிகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. மேலும், அந்நகரின் கால்வாயில் வெள்ளம் பாய்ந்தோடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மணாலி பகுதியில் ஆற்றின் கரையோரம் இருந்த வணிக கட்டிடங்கள், ஏ.டி.எம். மையம் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
நிலச்சரிவால் ஷிம்லா பகுதியில் ரயில் சேவையும், குலு பகுதியில் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.