கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதி அமைப்பான ஐ.எம்.எப்.பின் அதிகாரிகள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
லாகூரில் உள்ள ஜமன் பார்க் இல்லத்துக்கு வருகை தந்த ஐ.எம்.எப்.அதிகாரிகள் சுமார் ஒருமணி நேரம் இம்ரான் கானுடன் ஆலோசனை நடத்தினர், அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கு இம்ரான் கான் தமது முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின்னர் பாகிஸ்தானில் புதிய அரசு அமையும்போது அந்த அரசு தனது சூழலுக்கு ஏற்ப பேச்சுவார்த்தையைத் தொடரலாம் என்றும் இம்ரான் கான் கூறினார்.