சந்திரயான் 3 விண்கலத்தை ஏவுவதற்கு ஏதுவாகவும், பிஎஸ்என்எல் கண்ணாடி இழை கேபிள்கள் மற்றும் தகவல் தொடர்பு வயர்கள் அறுந்து விடாமல் இருப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றி சாலை அமைத்தல் மற்றும் பள்ளங்கள் தோண்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி மையம் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மற்றும் பிற முக்கியமான தகவல் தொடர்புகளுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் ஏவுதலின் வெற்றிக்கு, இன்று முதல் ஜூலை 14 வரையிலான காலகட்டத்தில் சாலை விரிவாக்கம், சாலை பழுதுபார்ப்பு மற்றும் பள்ளம் தோண்டுதல் நடவடிக்கைகளால் பிஎஸ்என்எல் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் சேதமடையாமல் இருப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.