நடிகர் விஜய் தலைவர்களைப் பற்றி பேசினால் மட்டும் போதாது என்றும் அவர்களுடைய கொள்கைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
சென்னையில் பேட்டியளித்த அவரிடம், விஜய் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.
தி.மு.க தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என கூறிவிட்டு தற்போது தகுதி நிர்ணயம் எனக்கூறி விதிகளை அமல்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்று அன்புமணி தெரிவித்தார்.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு, தமிழகத்தின் வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.