​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தி.மு.க நிர்வாகியை காப்பாற்றிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்...!

Published : Jul 08, 2023 7:44 PM

புதுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தி.மு.க நிர்வாகியை காப்பாற்றிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்...!

Jul 08, 2023 7:44 PM

புதுக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தி.மு.க நிர்வாகியை அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் காப்பாற்றி முதலுதவி அளித்து தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

புதுக்கோட்டை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சின்னையா சத்திரம் அருகே காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி 2 பேர் படுகாயம் அடைந்து இருந்தனர்.

அவ்வழியாக சென்ற விஜயபாஸ்கர், காரிலிருந்து இறங்கி பார்த்தபோது விபத்துக்கு உள்ளான காரில், புதுக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணனின் தந்தை இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரையும் சரக்கு வாகன ஓட்டுநரையும் மீட்டு தனது காரிலேயே ஏற்றி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.