சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே செல்போனை பறிக்க முயன்றதால் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கந்தன்சாவடியை சேர்ந்த 22 வயதான ப்ரீத்தி கடந்த 2-ஆம் தேதி வேலை முடிந்து வழக்கம் போல பறக்கும் ரயலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது, ப்ரீத்தியிடம் இருந்து செல்ஃபோனை பறித்துக்கொண்டு ஒரு நபர் தப்பிச் சென்றார். அப்போது ப்ரீத்தி நிலை தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
ரயில்வே போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ப்ரீத்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனிடையே, ப்ரீத்தியின் செல்போன் எண்ணை ட்ராக் செய்த போலீசார், அது பட்டினபாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் இருபந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து விக்னேஷை போலீசார் கைது செய்தனர். விக்னேஷ் அளித்த தகவலின் பெயரில் மற்றொரு நபரான அடையாறைச் சேர்ந்த மணிமாறன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ப்ரீத்தியின் கையில் இருந்த செல்ஃபோனை பறித்துக்கொண்டு ஓடியது மணிமாறன் தான் என்றும், ரயில்நிலையத்திற்கு வெளியே இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த விக்னேஷுடன் அவன் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, சம்பவம் நடந்த ரயில்நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ள ப்ரீத்தியின் தந்தை, அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் என்றார்.