தமிழ்நாட்டின் மக்களின் மணல் தேவைக்காக மட்டும் தான் நம் தமிழ்நாட்டில் மணல் அள்ளப்பட்டதா? என, திமுக, அதிமுக கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் என, நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில், நாம் தமிழர் கட்சி சார்பில், மலை இல்லையேல், மழை இல்லை என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய சீமான் , 2 சதவீத அளவுக்கு தான் குடிநீர் உள்ளது. இதனால் மக்களுக்கு பேராபத்து வர உள்ளது என எச்சரிக்கை விடுத்தார்.