​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாதம் ரூ. 1000 உதவித் தொகை யார் யார் பெற முடியும்..?

Published : Jul 07, 2023 7:54 PM

மாதம் ரூ. 1000 உதவித் தொகை யார் யார் பெற முடியும்..?

Jul 07, 2023 7:54 PM

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என அதிகாரிகள் தகவல்

மாதம் ரூ. 1000 உதவித் தொகை யார் யார் பெற முடியும்..?

1. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்களாக இருந்தால் ரூ. 1000 உதவித் தொகை பெறலாம்

2. ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலமோ அல்லது 10 ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலமோ வைத்துள்ள குடும்பங்கள் பெறலாம்

3. ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெற முடியும்

ஒரு குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாகக் கருதப்படுவர் என்று அதிகாரிகள் தகவல்

ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்

குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார் என அதிகாரிகள் தகவல்

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அவரது மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவர்

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டதிற்கு ரேஷன் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும் என அதிகாரிகள் தகவல்

விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்