காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில்,வயிறு உபாதைகள் மற்றும் கர்ப்ப காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ள உபயோகபடுத்தும் அல்ட்ராசோனோகிராம், மார்பக கட்டி மற்றும் புற்றுநோயைக் கண்டறிய பயன்படுத்தப்படும் மேமோகிராம், உடலுக்குள் உள்ள பாதிப்புகளை கண்டறியும் நுண்கதிர்வீச்சு மெஷின் போன்ற மிகமுக்கிய உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் நோயாளிகள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இங்கு நாள் ஒன்றுக்கு 1000-க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
90 மருத்துவர்கள் பணிபுரியக் கூடிய இடத்தில் வெறும் 60 மருத்துவர்கள்மட்டுமே பணி புரிந்து வரும் இங்கு, மருத்துவ உபகரணங்கள் பழுது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.