ஆளுநர் ஆர்.என்.ரவி துணை வேந்தர்கள் கூட்டத்தை எந்த அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் நடத்தினார் என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, ஆளுநர் தொடர்ந்து அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
சின்டிகேட்டில் வழக்கமான 3 பேரைத் தவிர யு.ஜி.சி சார்பில் கூடுதலாக ஒருவரை நியமிக்க ஆளுநர் முயற்சிப்பதாக தெரிவித்த பொன்முடி, அந்த நான்காவது நபர் மூலம் பல்கலைக்கழங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆளுநர் விரும்புவதாகவும் கூறினார்.
சிண்டிகேட் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தக் கூடாது என்று கூறும் ஆளுநர், நாகை மீன்வள பல்கலைக்கழக மாணவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்து பட்டங்களை பெற்றுக் கொள்ளுமாறு கூறுவது சரியா என்றும் கேள்வி எழுப்பினார்.