அண்ணா... என்னைய திருடன்னு மட்டும் திரும்ப சொல்லாதீங்க... ஒரு வண்டி திருடரின் ஆதங்கம்.. திருட்டு ராசாவுக்கு கோபமெல்லாம் வருது..!
Published : Jul 06, 2023 7:00 PM
அண்ணா... என்னைய திருடன்னு மட்டும் திரும்ப சொல்லாதீங்க... ஒரு வண்டி திருடரின் ஆதங்கம்.. திருட்டு ராசாவுக்கு கோபமெல்லாம் வருது..!
Jul 06, 2023 7:00 PM
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து , இரு சக்கரவாகனம் ஒன்றை அபேஸ் செய்த ஆசாமி, அந்த வண்டிக்கு கோவிலில் பூஜை போட்டுவிட்டு, மெக்கானிக் கடையில் கொடுத்து பழுது பார்த்த போது கையும் களவுமாக உரிமையாளரிடமே சிக்கினார்...
திருடிய பைக்குடன் கையும் களவுமாக சிக்கிய நிலையில், தன்னை திருடன் என்று சொல்லாதீர்கள் என்று வாகன உரிமையாளரிடம் உருத்தாக உரிமைக்குரல் எழுப்பும் இவர் தான் வினோத திருடர் ராஜா ..!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நண்பரை பார்க்க சென்ற பாலு என்பவரின் பழைய இரு சக்கரவாகனத்தை மர்ம ஆசாமி திருடிச்சென்ற நிலையில் பாலுவின் நண்பர் தேடிச்சென்ற சில மணி நேரத்தில் அந்தப்பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் பாலுவின் வண்டியுடன் இந்த காக்கி பேண்டு சட்டை போட்ட மன்னார் பாளையம் ராஜா கையும் களவுமாக சிக்கி உள்ளார் . வண்டியை தான் திருட வில்லை என்றும் தனது நண்பர் எடுத்து தந்ததாகவும் கூறி சமாளித்தார்.
வண்டியை திருடிச்சென்ற கையோடு கோவிலில் சென்று பூஜை போட்டதாகவும், வழியில் வண்டி மக்கர் செய்ததால் ஒர்க் ஷாப்புக்கு கொண்டு வந்து சரி பார்த்துக் கொண்டிருந்த போது ராஜா சிக்கியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் வண்டியை தான் திருடவில்லை என்று கூறிய ராஜா, தன்னுடைய கூட்டாளி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தான் ஒரு சர்வதேச உத்தமர் போல பேசி உதார் விட்டார்.
செவ்வாய் பேட்டை லாரி ஸ்டேண்டில் பழக்கமான நண்பர் கொடுத்த வண்டியால் தான் சிக்கிக் கொண்டதாக கூறி தலையில் கைவைத்து அமர்ந்தார் அந்த ரோசக்கார திருடர்.
அந்த பழைய இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரோ, நம்ம வண்டிய நம்மள தவிர யாரும் ஓட்ட முடியாது... அப்படி இருக்க யாரு திருடிட்டு போயிருப்பான்னு பார்த்தா... இதை திருடுறதுக்கும் ஆள் இருக்கு என்று வியப்புடன் தெரிவித்தார்.
திருட்டு வண்டியுடன் சிக்கிய ராஜாவை பிடித்து கூட்டாளி குறித்து விசாரித்து வரும் போலீசார், பழைய வண்டி இல்ல இத்து போன இரும்ப கூட திருட பல பேரு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் மக்களே உஷாரா இருங்க என்று எச்சரிக்கின்றனர்.