கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையை நாள் தோறும் கடந்துச் சென்று படித்து வரும் மலைவாழ் கிராம மாணவ-மாணவிகளுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணம் அளிக்க வேண்டுமென படகோட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேச்சிப்பாறை அணை பகுதியின் உட்பகுதியில் கிளவியார், தச்சமலை உள்ளிட்ட 10 மலை கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலவும், பொதுமக்கள் அன்றாட பணிகளுக்காகவும் அணையை கடந்துச் செல்ல வேண்டியுள்ளது.
மாணவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் படகை இயக்கும் தங்களிடம் குறைந்தளவு பாதுகாப்பு உபகரணங்களே உள்ளதால் பயணிகளின் நலன் கருதி கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டுமென படகோட்டிகள் தெரிவித்துள்ளனர்.