மறு சுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பின் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தால் 600 மில்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கழிவு பஞ்சுகளில் இருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலர் நூல் போர்வை, மெத்தை விரிப்பு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளதை அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, பருத்தி பேலின் விலை குறைந்த பிறகும் குறையாமல் உள்ள கோம்பர் வேஸ்ட், கழிவு பஞ்சுகள் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார.
சிறு, குறு நடுத்தர மில்களுக்கான கட்டாய டிமாண்ட் சார்ஜ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், மில்களுக்கான "பீக் அவர்ஸ் சார்ஜ்" என்ற கூடுதல் மின் கட்டண உயர்வை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தொழில் நசியாமல் காக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.